- வாய்மையே வெல்லும்
பரிமாற்றம்
தீக் குச்சியிலிருந்துதீவட்டிக்கு..
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த
தீயின்.. மிச்சத்
தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்..
மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்..
அணைத்துக் கரைக்க!
ஆரண்யம்
அடர் வனம் அதிரஇழை தழை
சரசரக்க..
சார்ந்தூறும்..
மண்வெளிப் புழுதியில்
அடங்கா விரகத்தை..
வரைந்து..
சீறிய சர்ப்ப இணையொன்று..
உஷ்ஷென..
தலை தூக்கி..
நெம்பி நிமிர்ந்து..
உடலுள் உடல் தோய..
பிணைவதை..
காணல் பாவமென
அகன்றான் பாம்பாட்டி,
நீட்டிய துப்பாக்கி
வெடித்ததிர
தோலுரித்து போனான்..
வியாபாரி,
கலாச்சாரம் விழுங்குது
நாகரீகப் பாம்பு,
வணிகமல்ல பாம்பாட்டல்..
ஆனால்..
வித்தையாச்சு..
வணிகம்!

