தமிழ் இலக்கிய இதழ்


கவிதைப் பூங்கா


  வாய்மையே வெல்லும்

விண்ணப்பம்

உயிர்த் திரியின்
இறுதித் துளி வழி
நடமிடும்.. என் நவகவிதை
வெளிச்சத்தை
உள்ளத்தின் ஆழ் குகையில்
தொகுத்து வை தோழா,
என்றேனும்..
ஏதுவாய் இருக்கும்..
எனக்கான..
அஞ்சலியில் வாசிக்க!

சாட்சி

சூரியன் சரிந்த
அந்திப் பொழுதொன்றில்..
உயிர் கொண்ட
வீட்டுக் குழல் விளக்கினோரம்
ஒளி அண்டி ஒதுங்கிய
சிறு பூச்சியொன்றை..
பதுங்கிக் காத்திருந்து..
பல்லி விழுங்கியதைக்
கண்டு பதைத்த..
அதே நொடி..
அறுந்து விழுந்தது
பல்லியின் வால்,
மீளாப் பூச்சியின்
வாழ்வுக்கு..
ஈடாகக் கூடுமோ?
திரும்ப முளைக்கும் வால்..

ஒரு கவிதை

எப்படி இருப்பாயோவென
எப்படி எப்படியோ எண்ணி
மறுகுகையில்,
இப்படித்தான் இருக்கிறாய்
என அறிந்தால்..
இருக்க வேண்டியதில்லை..
இப்படி நான்,
அப்படித்தான் ஆனதிங்கே..
தரவும்.. பெறவும்.. முடியாமல்..
ஆறுதலை!