- வாய்மையே வெல்லும்
காயங்கள்
இப்போதெல்லாம்..
தீ மீது நடக்கக்
கற்றுக் கொண்டுவிட்டேன்.
இமைக்காமல் கூட
வைத்திருக்க முடியும்
என் இமைகளை,
பசித்திருக்கவும்..
தனித்திருக்கவும்..
விழித்திருக்கவும்..
தெரியுமெனக்கு.
கண்ணீரிலிருந்து..
காயங்களுக்கு..
மருந்து செய்யும்..
ரசவாதம் அறிந்தவன் நான்,
என்னைக் குத்தி.. குத்தி..
முட்களுக்கே காயம்,
போர்களங்களுக்கு
வாளையே எடுத்துப் போகாத எனக்குக்
கேடயங்கள் எதற்கு?
பிரிவுக் கோடரியை
என் திசையில்
தூக்கி எரிந்த.. பிரியமானவளே..
புறமுதுகிடுகிறேன்.. என்று..
எக்களிக்காதே..
என் நெஞ்சுக் கூட்டிலும் இருப்பது
நீயே என.. அறி!
தீ மீது நடக்கக்
கற்றுக் கொண்டுவிட்டேன்.
இமைக்காமல் கூட
வைத்திருக்க முடியும்
என் இமைகளை,
பசித்திருக்கவும்..
தனித்திருக்கவும்..
விழித்திருக்கவும்..
தெரியுமெனக்கு.
கண்ணீரிலிருந்து..
காயங்களுக்கு..
மருந்து செய்யும்..
ரசவாதம் அறிந்தவன் நான்,
என்னைக் குத்தி.. குத்தி..
முட்களுக்கே காயம்,
போர்களங்களுக்கு
வாளையே எடுத்துப் போகாத எனக்குக்
கேடயங்கள் எதற்கு?
பிரிவுக் கோடரியை
என் திசையில்
தூக்கி எரிந்த.. பிரியமானவளே..
புறமுதுகிடுகிறேன்.. என்று..
எக்களிக்காதே..
என் நெஞ்சுக் கூட்டிலும் இருப்பது
நீயே என.. அறி!
வார்த்தைகள்
சோர்ந்த மௌனத்தில்..
சுருண்டு கிடந்த
என் மொழி..
பிடரிசிலிர்த்து..
வீறுகொண்டெழுந்தது,
கற்றறிந்த சொற்களெல்லாம்
கட்டுண்டன கவிதைக்குள்!
என் வார்த்தைகளைத்
தூக்கிப் பிடித்து நிற்கும்
உன் வார்த்தைகளை
வாஞ்சையோடு
முத்தமிடுகிறேன்.. ஒரு குழந்தையைப் போல்,
சொற்களை உருட்டும்
சொக்கட்டான் ஆட்டத்தில்..
ஒரு முறைதான் விசிறிவிட்டாய்
அந்தப் பெரு நெருப்பை..
எல்லமே..
எரிஞ்சுப்போச்சு!
சுருண்டு கிடந்த
என் மொழி..
பிடரிசிலிர்த்து..
வீறுகொண்டெழுந்தது,
கற்றறிந்த சொற்களெல்லாம்
கட்டுண்டன கவிதைக்குள்!
என் வார்த்தைகளைத்
தூக்கிப் பிடித்து நிற்கும்
உன் வார்த்தைகளை
வாஞ்சையோடு
முத்தமிடுகிறேன்.. ஒரு குழந்தையைப் போல்,
சொற்களை உருட்டும்
சொக்கட்டான் ஆட்டத்தில்..
ஒரு முறைதான் விசிறிவிட்டாய்
அந்தப் பெரு நெருப்பை..
எல்லமே..
எரிஞ்சுப்போச்சு!
சித்திரமே!
தேவதைகளின்
தேசத்திலிருந்து
நீ வருவதாய் அறிகிறேன்.
கறுப்பு நிறப் பூக்கள்
பற்றிய அறிதலற்ற..
என் கவிதைப் பட்டறையில்
ஆய்வுக்குட்ப்பட்டிருக்கிறது..
உன்னிரு விழிகள்.
ஒளிப்பார்வையில்
நிலவுத் துணுக்கும்..
சூரியத் துகளும்
கலந்த விகிதாச்சாரம் பற்றிய
யோசனை என்னுள்.
நெளியும் புருவங்கள்..
வரவேற்புத் தோரணமா?
கறுப்புக் கொடியசைவா?
அழகின் தாகம் தீர
உன்னைத் தொட்டு.. தொட்டு..
மேகச்சீலையில்
சித்திரம் தீட்ட
என் மனத்தூரிகையின் உக்கிரம்.
நீ புன்னகைக்கிற போதெல்லாம்..
பூமிக்கு வசந்தம்,
பேசுகிற போதெல்லாம்..
மொழிக்கு கர்வம்.
உன் ஒப்பணை அறையின்
நிலைக்கண்ணாடியை
நினைத்து.. நினைத்து..
பற்றியெரியும்..
பொறாமைத்திரியால்..
எப்போதும்.. வெடிக்கலாம்..
என் இதயம்.
தேசத்திலிருந்து
நீ வருவதாய் அறிகிறேன்.
கறுப்பு நிறப் பூக்கள்
பற்றிய அறிதலற்ற..
என் கவிதைப் பட்டறையில்
ஆய்வுக்குட்ப்பட்டிருக்கிறது..
உன்னிரு விழிகள்.
ஒளிப்பார்வையில்
நிலவுத் துணுக்கும்..
சூரியத் துகளும்
கலந்த விகிதாச்சாரம் பற்றிய
யோசனை என்னுள்.
நெளியும் புருவங்கள்..
வரவேற்புத் தோரணமா?
கறுப்புக் கொடியசைவா?
அழகின் தாகம் தீர
உன்னைத் தொட்டு.. தொட்டு..
மேகச்சீலையில்
சித்திரம் தீட்ட
என் மனத்தூரிகையின் உக்கிரம்.
நீ புன்னகைக்கிற போதெல்லாம்..
பூமிக்கு வசந்தம்,
பேசுகிற போதெல்லாம்..
மொழிக்கு கர்வம்.
உன் ஒப்பணை அறையின்
நிலைக்கண்ணாடியை
நினைத்து.. நினைத்து..
பற்றியெரியும்..
பொறாமைத்திரியால்..
எப்போதும்.. வெடிக்கலாம்..
என் இதயம்.
காற்றே!
அன்றொரு நாள்..
வெளி ஜன்னலில்
அடிக்கடி வீசிய இளங்காற்று...
எதிர்பாராத நாளொன்றில்..
உள்பாய்ந்து,
கனவுப் பூக்கள் நெய்த
திரைச்சீலயை வருட..
உறக்கம் விழிப்பானது!
பின்பொரு நாள்..
அதே காற்று..
வந்த சுவடு மறந்து.. வெளியேறிய
நனவின் புழுக்கத்தில்..
விழிப்பும் உறக்கமானது,
வந்து போன.. காற்றின் நினைவாய்..
கதவிடுக்கில்..
கரயான்புற்று!
வெளி ஜன்னலில்
அடிக்கடி வீசிய இளங்காற்று...
எதிர்பாராத நாளொன்றில்..
உள்பாய்ந்து,
கனவுப் பூக்கள் நெய்த
திரைச்சீலயை வருட..
உறக்கம் விழிப்பானது!
பின்பொரு நாள்..
அதே காற்று..
வந்த சுவடு மறந்து.. வெளியேறிய
நனவின் புழுக்கத்தில்..
விழிப்பும் உறக்கமானது,
வந்து போன.. காற்றின் நினைவாய்..
கதவிடுக்கில்..
கரயான்புற்று!
