- வாய்மையே வெல்லும்
விழி வழி புகுந்து உயிரொடு கலப்பது காதல். விழிகள் சொல்லும் கதையும் சொன்ன கதையும் ஏராளம். காதல் பயிர் வளர நீருற்றுவது விழிப் பரிமாறல்கள். விழிகள் சொன்ன கதையில் சில வரிகள் இதோ!
விழிகள் சொன்ன கதை!
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
விடிய விடிய வெள்ளிநிலவு சிரித்தது.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வாசலுக்கு அருகிலேயே நின்றது இதயம்.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வண்ணத் தாமரை முகமும் சிந்தியது அழகு.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வானத்தின் மேகமும் செக்கர் நிறம் கொண்டது.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வாய் திறந்த மலர்களும் மோகனமாய்ஸ் சிரித்தது.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வெள்ளி அருவியும் வேகமாய்க் குதித்தது.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வான் மகளும் கிழக்கை நோக்கி ஓடினாள்.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
விழிகள் சொன்ன பதிலோ - மகிழ்ச்சி!
பாகம்பிரியாள்.
